இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணி இதுதான்.புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணி இதுதான்.புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபில் தொடரில் ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக்காரரான அதிக ரன் குவிப்புப் பட்டியலில் முதலிடம் வகிக்கும்அம்பாத்தி ராயுடுவுக்குமீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் பார்மைக் கொண்டுஷ்ரேயஸ் அய்யருக்குவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால்தினேஷ் கார்த்திக்தேர்வு செய்யப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக அந்த வெற்றியைப் பெற்றுத் தந்த தினேஷ் கார்த்திக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமாகவே ஆடிவருகிறார்.

தோனி விக்கெட் கீப்பர்.

ஸ்பின்னர்களானசாஹல், குல்தீப்தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதே போல்கே.எல்.ராகுலும்தன் ஐபிஎல் பார்ம் மூலம் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார்.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு, தோனி, சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ்.

அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான டி20 அணி வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.