சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை வீசித் தாக்குதல் ..!

சிரியாவில் உள்ள படைத்தளங்களின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.  சிரியா எல்லையில் உள்ள படைத்தளங்களில் அரசுக்கு ஆதரவான ஈரானிய படையினர்

சிரியாவில் உள்ள படைத்தளங்களின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.  சிரியா எல்லையில் உள்ள படைத்தளங்களில் அரசுக்கு ஆதரவான ஈரானிய படையினர்  முகாமிட்டுள்ளதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வந்தது.

இந்நிலையில் இன்று டமாஸ்கஸ், ஹாம்ஸ், சூய்டா ஆகிய நகரங்களில் உள்ள விமானப் படைத்தளங்கள், ஆயுதக் கிடங்குகள், படை முகாம்கள் ஆகியவற்றின் மீது எண்ணற்ற ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினர் மீது ஈரானியப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லீபர்மேன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஏவிய ஏவுகணைகளில் பாதிக்கு மேற்பட்டவற்றை சிரியா வானில் இடைமறித்து வீழ்த்தியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது