ஜேசன் , ஸ்டார்க் இருவரின் பந்து வீச்சை பார்த்து மிரண்டு போன இங்கிலாந்து !

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில்

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய  ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஜேசன் , ஸ்டார்க் இருவரின் பந்து வீச்சை அனைத்து அணி வீரர்களின் மத்தியில் வியப்பாகவே பார்க்கப்ப்பட்டது.காரணம் இவர்கள் இருவரும் மட்டும் 9 விக்கெட்டை பறித்தனர்.அதில் ஜேசன் 5 விக்கெட்டையும்  , ஸ்டார்க் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர்.நேற்றைய போட்டியில் ஜேசன் 10 ஓவர் வீசி 44 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டை பறித்தார்.ஸ்டார்க்  நேற்று 8.4 ஓவர் வீசி அதில் ஒரு ஓவரை மெய்டன் செய்து 4 விக்கெட்டையும் வீழ்த்தி ,43 ரன்கள் கொடுத்தார்.இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோற்பதற்க்கு முக்கிய காரணம் ஸ்டார்க்  ஆட்டம் தொடக்கத்தில் வீழ்த்திய ஜோ ரூட் ,மோர்கன் இருவரின் விக்கெட்டை வீழ்த்தியது தான். இவர்கள் இருவருமே ஒன்றை இலக்கு எண்ணுடன் வெளியேறினார்.இப்போட்டியில் ஜோ ரூட் 8, மோர்கன் 4 ரன்னில் அவுட் ஆனார்கள்.