தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கைது..!

ஜாக்டோ-ஜியோ அமைப்பு தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் நேற்று முதல் கைது செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வருகின்ற பேருந்துகள் மற்றும் வாகனங்களை, பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய இடங்களில் பரங்கிமலை போலீசார் மறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வாலாஜா சாலை வழியாகவும், நேப்பியர் பாலம் வழியாகவும் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ – ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிருத்தினர். இதனால் அவர்கள் வாலாஜா சாலையிலும், நேப்பியர் பாலத்தின் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் 1000-திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்துள்ளனர்