ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படிஇந்தியாவில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்கினால் ரிலையன்ஸ் சார்பில் குறிப்பிட்ட சலுகை கிடைக்கும்.
unknown nodeஇப்போது வாடிக்கையாளர்கள் பழைய டாங்கிள்களை கொடுத்து புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்கினால், புதிய வைஃபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படும் என ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்டபிள் ஹாட்ஸ்பாட் சாதனம் பொறுத்தவரை 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக ஒரே சமயத்தில் வைஃபை வசதி கொண்ட பத்து சாதனங்களிலும், பின்பு ஒரு சாதனத்திற்கு யுஎஸ்பி மூலம் இணைத்து பயன்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹாட்ஸ்பாட் சாதனம்.
unknown nodeஇந்த ஜியோஃபை ரவுட்டர் பொறுத்தவரை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் ஜியோஃபை 91 சதவீதம் பங்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்படுத்தி வருகிறது ஜியோ நிறுவனம்.
unknown nodeஜியோஃபை ஹாட்ஸ்பாட் சாதனத்தில் உள்ள ஒஎல்இடி டிஸ்பிளே நெட்வொர்க் சிக்னல், பவர், வைஃபை ஸ்டேட்டஸ் போன்ற அனைத்து தகவல்களையும் வழங்குகிறது, குறிப்பாக அதிவேக 4ஜி இன்டர்நெட் வசதியை இதில் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு எச்டி வீடியோ கால், வாய்ஸ் கால், மெசேஜ் போன்ற அனைத்து வசதியும் வழங்குகிறது இந்த சாதனம்.