ஜெர்மனியில், பொதுவுடைமைக் கருத்தியலின் தந்தை கார்ல் மார்க்சின் இருநூறு ஆண்டு நிறைவையொட்டி அவர் பிறந்த நகரில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது.
இரண்டாயிரத்து முந்நூறு கிலோ எடை, ஐந்தரை மீட்டர் உயரம் கொண்ட சிலையைச் சீனா ஜெர்மனிக்கு நன்கொடையாக வழங்கியது.
இந்த முழு உருவ வெண்கலச் சிலை கார்ல் மார்க்சின் சொந்த நகரமான டிரையரில் அவர் வீட்டருகில் நிறுவப்பட்டுள்ளது.
கார்ல் மார்க்சின் இருநூறாண்டு நிறைவையொட்டி இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலைத் திறப்பு விழாவில் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள், சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.