கர்நாடக முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரச்சாரம்: மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வளர்ச்சிப் பணிகள் தொடரும்..!

கர்நாடக முதல்வர் சித்தராமையா, வளர்ச்சி வேண்டுமா மல்லது மத கலவரம் வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யலாம் என்று  தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, வளர்ச்சி வேண்டுமா மல்லது மத கலவரம் வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யலாம் என்று  தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிதாமி பகுதியில் முதல்வர் சித்தராமையா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டோம். கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வளர்ச்சிப் பணிகள் தொடரும். வறுமைக் கோட்டில் இருந்து ஏழைகள் மீட்கப்படுவார்கள். நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசு வருகிறார். மக்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரதமரும் இதர பாஜக தலைவர்களும் பேசி வருகின்றனர். வளர்ச்சி வேண்டுமா அல்லது மத கலவரங்கள் வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யலாம்.

இவ்வாறு முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

லிங்காயத்து சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரித்து சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இந்தப் பின்னணியில் பிதாமி பகுதியில் அமைந்துள்ள லிங்காயத்துகளின் புனிதத் தலமான சிவயோகி கோயிலுக்கு முதல்வர் சித்தராமையா நேற்று சென்று வழிபட்டார்