கேரளா பெண்ணிற்காகவா பேஸ்புக்கில் டேட்டிங் சேவையை தொடங்கினார் மார்க் ஜுக்கர்பெர்க்..!

கேரளத்தை சேர்ந்த ஜோதி எனும் பட்டதாரிப்பெண், பேஸ்புக்கில் செய்த ஒரு காரியத்தை,  கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

கேரளத்தை சேர்ந்த ஜோதி எனும் பட்டதாரிப்பெண், பேஸ்புக்கில் செய்த ஒரு காரியத்தை,  கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

unknown node

மலப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் 28 வயதான ஜோதி கே.ஜி, பேஸ்புக்கை மேட்ரிமோனியாக பயன்படுத்த முடிவு செய்தது மட்டுமின்றி, #பேஸ்புக்மேட்ரிமோனி என்கிற ஹேஷ்டேக்கையும் சேர்த்தே ட்ரெண்ட் ஆக்கி விட்டுள்ளார்.

“நான் திருமணம் ஆகாதவள். என் நண்பர்கள் யாருகேனும் யாரவையாவது அறிந்திருந்தால், எனக்கு தெரியப்படுத்துங்கள், எனக்கு எந்த கோரிக்கைகளும் இல்லை, சாதி மற்றும் ஜாதகம் போன்றவைகள் ஒரு விஷயமே இல்லை. என் பெற்றோர் உயிருடன் இல்லை. நான் பேஷன் டிசைனிங் பிரிவின் கீழ் பிஎஸ்சி படித்துள்ளேன். என் அண்ணன் மும்பையில் வேலை செய்கிறார், என் சகோதரி ஒரு மாணவர் ஆவார், என் முகவரி இங்கே இருக்கிறது.” – இது தான் அந்த பேஸ்புக் போஸ்ட்.!

#FacebookMatrimony என்கிற ஹேஷ்டேக் தீயாய் பரவி வருகிறது.!

unknown node

திருமணங்களுக்கான வலைத்தளங்களில் (மேட்ரிமோனி) சைன்-இன் செய்வதற்கு பதிலாக, ஜோதி கே.ஜி, அவருக்கான மணமகனை கன்றிய உலகின் மிகப்பெரிய சமூக நெட்வொர்க்கிங் தளங்களில் ஒன்றான பேஸ்புக் பயன்படுத்தி உள்ளதென்பது புத்திசாலித்தனமாக செயலாக பார்க்கப்படும், மறுகையில் அவர் தனது போஸ்டில் பயன்படுத்திய #FacebookMatrimony என்கிற ஹேஷ்டேக் தீயாய் பரவி வருகிறது.

பதிவிட்ட நேரத்திலேயே ஜோதி கே.ஜி-ன் பேஸ்புக் போஸ்ட் ஆனது, ஏறக்குறைய 6000 ஷேர்ஸ் மற்றும் 10,000 லைக்ஸ்களை பெற்றது. எல்லாவற்றிக்கும் மேலாக கமெண்ட் செக்ஷனில் ஒரு மினி உலக யுத்தமே நடக்கிறது. ஜோதியை பொறுத்தவரை, பேஸ்புக் ஒரு தீர்வாகும். ஒரு லைஃப் பார்ட்னரை கண்டுபிடிப்பதில் இருக்கும் சிரமங்களை எளிமையாக எதிர்கொள்ள உதவும் ஒரு தளமாகும்.

unknown node

மக்கள் எளிதாக உள்நுழைந்து, அவர்களின் விவரங்களை உள்ளிட்டு, அவர்களுக்கான பார்ட்னரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று ஜோதி கூறுகிறார். அதாவது எந்தவொரு இடைத்தரகர்கள் அல்லது திருமண வலைத்தளங்களின் குறுக்கீடுகளும் இல்லாமல், நாமே நமது வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளலாம் என்கிறார் ஜோதி.

கமெண்ட் செக்ஷனில் “வாய் சண்டை” கலவரங்கள் நிகழும் மறுகையில், ஜோதியின் மேட்ரிமோனியல் போஸ்டிற்கு பல பயனர்களிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளது. சிலர் கமெண்ட் செக்ஷனில் தங்கள் தொடர்பு விவரங்களை பதிவிட்டு உள்ளனர். இன்னும் சிலர் ஜோதியை சந்திப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளனர், இன்னும் சிலர் பேஸ்புக்கை எப்படி எல்லாம் திறம்பட பயன்படுத்தலாம் என்பதை, ஜோதியின் வழியாக புரிந்தும் கொண்டனர்.

ஜோதியின் வாய் ராசியை வெளிப்படுத்தும் வண்ணம் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனம் ஆன மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டிற்கு பின்னர், பேஸ்புக்கின் மொபைல் ஆப்பில், டின்டர் (Tinder) பாணியிலான ஒரு டேட்டிங் சேவையை பேஸ்புக் இணைக்கும் என்பது தான் அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்புக்கு ஜோதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தான், ஆனால் காலம் நம்மை சம்மந்தப்படுத்தி பார்க்க வைத்துள்ளது. பேஸ்புக் அறிவித்துள்ள டேட்டிங் சேவையானது முற்றிலும் ஒரு விருப்பத்தேர்வாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.