ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!

இந்திய எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்

இந்திய எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டம் படிகம் (badigam) என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்புப் படையினர், ரிசர்வ் போலீஸ் படையினர், காவல்துறையினர் இணைந்து சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் சரணடையுமாறு ஒலிப்பெருக்கி மூலம் வீரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களில் தீவிரவாதிகள் தாக்க தொடங்கினர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த முகமது ரஃபி பாட் (Mohammed rafi bhat) என்பதும், இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்படுபவர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். புர்ஹான் வானிக்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன