ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற ஒருவரை பிரதமர் மோடி தேர்வு செய்தார்:ராகுல்காந்தி..!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெருங்கட்சியாக வெற்றி  பெற்றால் தாம் பிரதமராவதில் தடையிருக்காது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெருங்கட்சியாக வெற்றி  பெற்றால் தாம் பிரதமராவதில் தடையிருக்காது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் களப்பிரச்சாரம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டி உள்ளது.

பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற ஒருவரை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றியடைந்தால், பிரதமர் பதவியை ஏற்பீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ஏன் கூடாது, நிச்சயமாக பிரதமராக பதவி ஏற்பேன் என ராகுல்காந்தி பதிலளித்துள்ளார்.