ஹவாய் தீவில் எரிமலை வெடித்துச் சிதறி, லாவா குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், அங்குள்ள தேசியப் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது.
அங்குள்ள கிலாயூ (Kilauea)என்ற எரிமலை கடந்த வாரம் முதல் தீப்பிழம்புகளை வெளியேற்றி வருகிறது.
அடர்ந்த கரும்புகை காற்றில் தொடர்ந்து பரவி வருகிறது. காடுகளைக் கடந்து பயணித்து வரும் தீப்பிழம்புகள் குடியிருப்புகளை நோக்கி வந்ததால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள தேசியப் பூங்கா, இன்று முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது