அதிக வேலைப்பளு, மனஉளைச்சல். நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள், நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.
இவர்கள் பேரீச்சம்பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து நாட்டு பசும்பாலில் ஊறவைத்து பின் கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஞாபகசக்தி கூடும்.
கை கால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம்பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்
மேலும் இதய நோய்கள் அண்டாது.
பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் கொதிக்க வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.