இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது:ஸ்வீடிஷ் அகாடெமி..!

ஸ்வீடிஷ் அகாடெமி, 2018-ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என நோபல் விருது வழங்கும்  அறிவித்துள்ளது.

ஸ்வீடிஷ் அகாடெமி, 2018-ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என நோபல் விருது வழங்கும்  அறிவித்துள்ளது.

உலகின் துறைகள் சார்ந்த விருதுகளில் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் விருது 1901 முதல் ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.1968 முதல் பொருளாதார துறைக்கும்  வழங்கப்பட்டு வருகிறது.

unknown node

ஒவ்வொரு வருடமும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர்கள் நோபல் பரிசுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு மே மாதம் விருது வென்றவர்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும். அந்த வகையில் இந்த மாதம் பரிசுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில்இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என ஸ்வீடிஷ் அகாடெமி அறிவித்துள்ளது.

விருது வழங்கப்படாததன் பின்னணி

18 பேர் கொண்ட நோபல் பரிசு தேர்வாளர்கள் குழுவில் இருக்கும் உறுப்பினரான காத்தீரனா பிராஸ்டென்சன் என்பவரின் கணவர்  மீது கடந்த ஆண்டு பாலியல் புகார்கள் எழுந்தன. மேலும், நோபல் பரிசு குறித்து  அறிவிக்கும் முன்பே பரிசுக்குத் தேர்வானவர்களின் பெயர்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

unknown node

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று காத்தரீனா  பதவி விலக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், அவர் அதை மறுக்கவே, எதிர்ப்புத் தெரிவித்து தேர்வு  குழுவிலிருந்து  3 பேர் பதவி விலகினர். மேலும், #metoo எனும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான ஹேஷ்டாக்கின் காரணமாக நோபல் பரிசு அகாடமிக்கு எதிராக ஸ்வீடன் முழுக்க பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த குழப்பங்களின் காரணமாக தற்போது விருது குறித்த அறிவிப்பு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில்  ஸ்வீடிஷ் அகெடமியின் நிரந்தர செயலாளர் ஆன்டர்ஸ் ஆல்ஸன்,இந்த பிரச்சினை பொதுமக்கள், நோபல் அறக்கட்டளை, எதிர்கால பரிசு பெறுபவர்கள், கடந்த காலத்தில் பரிசு பெற்றவர்கள் ஆகியோரின் மரியாதையை கேள்விக் குறியாக்கிஇருக்கிறது.புதிய நோபல் பரிசு பெறுபவர்களை அறிவிக்கும் முன் மக்களிடம் இழந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்பது மிகவும் அவசியமாகிறதுஎன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது 2019-ம் ஆண்டு விருதுடன் சேர்த்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1935ல் தகுதியான நபர்கள் யாரும் இல்லை என கூறி விருது வழங்கப்படவில்லை. அதே போல முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களின் போது போரின் காரணமாக விருது வழங்கப்படவில்லை. அதன் பின் பாலியல் புகார்களின் காரணமாக விருது வழங்கப்படாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.