அதிர்ச்சியில் மக்கள்..இனி இதற்கும் கட்டணமே..! வாட்ஸ்ஆப்பின் புதிய பிளான்.!

உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட  வாட்ஸ்ஆப், எப்படி உலகளாவிய முறையில் பரவி கிடைக்கிறதோ, அது போன்றே அவ்வப்போது

உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட  வாட்ஸ்ஆப், எப்படி உலகளாவிய முறையில் பரவி கிடைக்கிறதோ, அது போன்றே அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்பின் புதிய அம்சங்களும் உலகெங்கிலும் கிடைக்கின்றன.

இதுபோன்ற பல அம்சங்களை பொதுவான பயன்பாட்டிற்கு உருட்ட வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது. அது சார்ந்த விவரங்கள் பேஸ்புக் எப்8 2018 மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது. ஒப்பிடுகையில், ஸ்னாப்சாட் ஸ்டோரீஸ் வெறும் 191 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை மட்டுமே கொண்டுள்ளது. மறுகையில் உள்ள வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆனது கடந்த நவம்பரில் மட்டுமே 300 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்டுருந்தது குறிப்பிடத்தக்கது.

unknown node

புள்ளி விவரங்களை தவிர்த்து, மாநாட்டில் பேசப்பட்ட புதிய அம்சங்களை பொறுத்தவரை, பயனர்கள் வாட்ஸ்ஆப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளில் தினமும் 2 பில்லியன் நிமிடங்களை செலவிடுகின்றனவாம், அதை மனதில் கொண்டு வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் உருட்டப்படவுள்ளது.கூறப்படும் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ காலிங் ஆனது, ஒரே நேரத்தில் நான்கு பயனர்களுக்கு மத்தியிலான க்ரூப் வீடியோ சாட்டை நிகழ்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்8 மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள விவரத்தின் படி, 3 மில்லியன்களுக்கும் மேலான நிறுவனங்கள், வாட்ஸ்ஆப் பிஸ்னஸை பயன்படுத்தி வருகிறது. தற்போது வரையிலாக, வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் ஆனது இலவசமாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நிறுவனம் விரைவில்அதை நாணயமாக்குதலுக்குள் கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக வங்கிகள், மொபைல் கேரியர்கள் மற்றும் ஏர்லைன்ஸ் போன்ற பெரிய பிராண்டுகளிடம் கட்டணம் வசூலிக்கவும், அதன் வழியாக வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் சேவைகளை வழங்குவதற்கு உதவவும் வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

unknown node

முன்னதாக, ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன் மற்றும் ‘டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்’ ஆகியவைகளை அறிமுகம் செய்த வாட்ஸ்ஆப் சமீபத்தில், அதன்‘சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்’என்கிற அம்சத்தையும் உருட்டியது. இந்த புதிய அம்சம் தற்போது ‘கூகிள் ப்ளே பீட்டா வெர்ஷனில்’ அணுக கிடைக்கிறது மற்றும் அந்த பதிப்பு 2.18.123 ஆகும்.

முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.

நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்த அம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ”என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் ‘அக்கவுண்ட்’ என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய “ரெக்வஸ்ட் அனுப்பட்டது” என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும்.

ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும்.