155 ஆவது ஆண்டு விடுதலை பெற்றதை உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்..!

பிரெஞ்ச் ராணுவத்தை தோற்கடித்து விடுதலை பெற்ற 155 ஆவது ஆண்டை மெக்சிகோ நாட்டு மக்கள் வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர்.

பிரெஞ்ச் ராணுவத்தை தோற்கடித்து விடுதலை பெற்ற 155 ஆவது ஆண்டை மெக்சிகோ நாட்டு மக்கள் வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர்.

நெப்போலியனின் தலைமையிலான பிரெஞ்சு ராணுவத்தை, மெக்சிகோ விடுதலைப் படையினர் 1862 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி தோற்கடித்தனர். சின்கோ டி மேயோ (Cinco de Mayo) என்ற பெயரில் இந்த நாளை ஆண்டு தோறும் மெக்சிகோ மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு, பிரெஞ்சு ராணுவ வீரர்களைப் போலவும், மெக்சிகோ விடுதலைப் படையினரைப் போலவும், அந்த மண்ணின் மைந்தர்களுக்கு உரிய ஆடைகளையும் உடுத்தி, பேரணியில் பங்கேற்றனர். மேலும், பிரெஞ்ச் ராணுவத்துடன் நடைபெற்ற இறுதிப் போரை நினைவு படுத்தும் காட்சிகளையும் அரங்கேற்றினர்