பொன்மலை சூசையப்பர் ஆலய தேர்பவனி..!!! சிறப்பாக நடந்தது..!!

திருச்சி பொன்மலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள்

திருச்சி பொன்மலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

உழைப்பாளர்களின் பாதுகாவலர் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுபவர் சூசையப்பர். உழைப்பாளர் தினமான மே 1-ந் தேதி இந்த ஆலயத்தில் தேர்பவனி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது.

தேரில் உயிர்த்தெழுந்த இயேசு, மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய தெய்வங்களை எழுந்தருள செய்து பவனி வந்தன. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து ஆலயத்தை அடைந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடன் இணைந்திருங்கள்