பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேத் தம்பதிக்கு மூன்றாவது ஆண் குழந்தை..!

பிரிட்டன் அரச குடும்பத்தினர் தங்களது குடும்பத்தின் புதுவரவான இளவரசர் லூயிசின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டன் அரச குடும்பத்தினர் தங்களது குடும்பத்தின் புதுவரவான இளவரசர் லூயிசின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேத் தம்பதிக்கு மூன்றாவது ஆண் குழந்தை கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பிறந்தது. இந்நிலையில், கடந்த மே 2ஆம் தேதி வில்லியம் – கேத் தம்பதியின் 2வது பெண் குழந்தையான சார்லோட்டின் 3வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அப்போது, இளவரசி சார்லோட் தனது தம்பியும், பிரிட்டன் ராணி குடும்பத்தின் புதுவரவான லூயிசை உச்சி முகரும் புகைப்படத்தை வில்லியம் – கேத் தம்பதியர் வெளியிட்டுள்ளனர். வில்லியம் – கேத் தம்பதிக்கு 3வது குழந்தையான இளவரசர் லூயிஸ், ராணி எலிசபெத்தின் 6வது கொள்ளுப் பேரனாவார்