பிரசிதிபெற்ற தஞ்சை புன்னை நல்லூர்..!!மாரியம்மனுக்கு 1008..!!பால்குட ஊர்வலம் சிறப்பாக நடந்தது..!!

பிரசிதிபெற்ற தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சித்திரை 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் பக்தர்களால் எடுத்துச்

பிரசிதிபெற்ற தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சித்திரை 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சித்திரை 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முத்துமாரி சுக்ரவார வழிபாட்டு குழு நலசங்கம் சார்பில் 12-வது ஆண்டாக 1008 பால்குட ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டது. மாரியம்மன்கோவிலில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து காலை 9 மணிக்கு பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன.

unknown node

ஊர்வலம் 4 ராஜவீதிகள் வழியாக அம்மன்சன்னதியை வந்தடைந்தது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. வருகிற 7-ந்தேதி மதியம் பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்