ராஜினாமா என்பது பதவிக்கு தானே தவிர, பணிக்கு அல்ல : கிரண் பேடி..!

ராஜினாமா செய்ய வலியுறுத்தும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதில் அளித்துள்ளார். கிரண் பேடி எடுத்த முடிவுக்கு எதிராக

ராஜினாமா செய்ய வலியுறுத்தும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதில் அளித்துள்ளார். கிரண் பேடி எடுத்த முடிவுக்கு எதிராக மூன்று முறை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதால், இனியும் பதவியில் தொடர வேண்டுமா என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும் என நாராயணசாமி கூறி இருந்தார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கிரண் பேடி, ராஜினாமா என்பது பதவிக்கு தானே தவிர, பணிக்கு அல்ல எனத் தெரிவித்துள்ளார். மக்கள் தன்னை தேடி வந்து குறைகளை கூறி தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டுள்ள கிரண் பேடி, புதுச்சேரி வளர்ச்சிக்கு பாடுபடுவதற்கு தமது ராஜினாமா மட்டுமே தீர்வல்ல என்பதைப் புரிந்து கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் என நாராயணசாமிக்கு பதில் அளித்துள்ளார்