ராயல் என்பீல்டில் வலம் வந்த பிரபல இந்தி நடிகர் சல்மான் கான்..!

பிரபல  இந்தி நடிகர் சல்மான் கான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் ஜாலியாக வலம் வரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபலஇந்தி நடிகர் சல்மான் கான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் ஜாலியாக வலம் வரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இவர் மீது குற்றம்சாட்டப்பட்ட மானை வேட்டையாடிய வழக்கில் இவரை குற்றவாளி என அறிவித்து ஜோத்பூர் நீதிமன்றம் இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்நிலையில் இரண்டு நாட்களில் ஜாமினில் வெளியே வந்த சல்மான் கான் தற்போது இந்தி திரைப்படங்களில் நடந்து வருகிறார்.

unknown node

இவர் நடித்துவரும் ரேஸ்3 என்ற திரைப்படம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோனாமார்க் என்ற பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாட்டஸ் நடித்து வருகிறார். இந்நிலையில் சல்மான்கான் ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ அதிக பனிப்பொழிவு இருந்ததால் மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சேனாமார்க் – கார்கில் ரோட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

unknown node

சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ முதலில் ஜாக்குலின் செல்பி வீடியோ எடுத்தது முதலிலும் தொடர்ந்து மற்றொருவர் சல்மான் கான் பைக் ஓட்டுவதை எடுக்கும் வீடியோவும் வருகிறது.

சேனாமார்க்கில் இருந்து கார்கில் பகுதி சுமார் 130 கி.மீ. அவ்வளவு தூரமும் சல்மான் கானே பைக்கை ஓட்டினாரா என்பது தெரியவில்லை. இது சுமார் 4 மணி நேர பயணமாகும். அவர் பின்னால் வரும் வாகனங்களை வைத்து பார்க்கையில் அவர் சிறிது தூரம் மட்டுமே பைக்கை ஓட்டியுள்ளார் என தெரிகிறது. அப்பொழுது நடிகை ஜாக்குலினும் அவருடன் பைக்கில் சென்றுள்ளார்.

unknown node