சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6+ ஸ்மார்ட்போன்கள் அதன் அதிகாரபூர்வமான இந்தோனேசிய தளத்தில் அறிமுகத்தை சந்தித்து உள்ளன. எதிர்பார்த்தபடியே, இந்த ஸ்மார்ட்போன்கள், அழகான மற்றும் திறன்மிக்க அம்சங்களை கொண்டு வெளியாகி உள்ளது.
unknown node4 ஜிபி ரேம் நுழைவு நிலை மாறுபாடான கேலக்ஸி ஏ6 பற்றி பேசுகையில், இது 1480 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 1.6 GHz உடனான ஒரு பெயரிடப்படாத Octa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது, மேலும் ஏ6 ஆனது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொறுத்து, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி என்கிற இரண்டு சேமிப்பு மாடல்களில் வாங்க கிடைக்கும்.
powered by Rubicon Project 16 மெகாபிக்சல் இமேஜிங் துறையை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் அளவிலான பின்பக்க கேமரா (எப் / 1.7) மற்றும் ஒரு 16 மெகாபிக்சல் (எப் / 1.9) அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், LTE உடனான CA, வைஃபை, ப்ளூடூத், NFC, ஜிபிஎஸ், GLONASS, மற்றும் மைக்ரோ USB சார்ஜ் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் தன்னுள் கொண்டுள்ளது.
unknown node3500எம்ஏஎச் பேட்டரி மறுகையில் உள்ள பெரிய மாறுபாடு ஆன கேலக்ஸி ஏ6 பிளஸ் ஆனது, 1.8 GHz உடனான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி என்கிற இரண்டு மாடல்களில் வாங்க கிடைக்கும். ஒரு 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், அதன் பின்பக்கத்தில் இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. டெப்த் ஆப் பீல்டை மாற்றி அமைக்க சாம்சங் லைவ் போகஸ் அம்சம் அதாவது எப்/1.7 துளை கொண்ட 16 எம்பி முதன்மை சென்சார் மற்றும் எப்/1.9 துலா உடனான 5 எம்பி இரண்டாம் நிலை சென்சாரை கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ6 பிளஸ் ஆனது, NFC, ப்ளூடூத், CAT6 LTE, ஜிபிஎஸ் மற்றும் வைஃபை ஆகியவற்றை கொண்டு வெளியாகும். பிக்ஸ்பை சூட் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும், ஹெட்போன்கள் வழியிலான ஒரு அதிவேக ஒலி அனுபவத்தை வழங்கும் டால்பி அட்மோஸ் ஆதரவு இருக்கும். உடன் பிக்ஸ்பை விஷன், பிக்ஸ்பை ஹோம், பிக்ஸ்பை ரீமைண்டர் உள்ளிட்ட சாம்சங் பிக்ஸ்பை சூட்டும் இடம்பெறும். ஆனால் நிறுவனத்தின் உயர்தர ஸ்மார்ட்போன்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பிக்ஸ்பை வாய்ஸ் இதில் கிடையாது.
ப்ளூ, பிளாக், கோல்ட் மற்றும் லாவெண்டர் கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும், ப்ளூ, பிளாக், கோல்ட் மற்றும் லாவெண்டர் ஆகிய வண்ண மாறுபாடுகளில் வெளி வந்துள்ளன.