‘ட்விட்டரில்' பார்த்து ரசித்தார் சிவகார்த்திகேயன்..!

‘காலா’ இசை வெளியீட்டு விழாவை, ட்விட்டரில் பார்த்து ரசித்தார் சிவகார்த்திகேயன்.

‘காலா’ இசை வெளியீட்டு விழாவை, ட்விட்டரில் பார்த்து ரசித்தார் சிவகார்த்திகேயன்.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் இசை வெளியீட்டு விழா தற்போது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இசை வெளியீட்டு விழா நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. விழாவில் கலந்துகொண்டு நேரடியாக நிகழ்ச்சியை ரசிக்க முடியாதவர்கள், ட்விட்டரில் பார்த்து வருகின்றனர். அதில், சிவகார்த்திகேயனும் ஒருவர்.

சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பார்க்கத் தொடங்கியதும், ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் இணைந்தது நோட்டிபிகேஷனாகக் காட்டியது. உடனே, ‘ஹாய் சிவா அண்ணா’, ‘நீங்களும் வந்துட்டீங்களா சிவா…’ என்றெல்லாம் ஏகப்பட்ட கமெண்ட்கள் வந்தன. சிவகார்த்திகேயன், ரஜினியின் மிகப்பெரிய ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். தன் தலைவரின் இசை வெளியீட்டு விழாவை அவர் ட்விட்டரில் பார்த்து ரசித்தார்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ஜூன் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. மத்திய தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.