போலந்து நாட்டில் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததில் அதில் இருந்த சாக்கோலேட் பாகு சாலையில் சிந்தி வழிந்தோடியது.
போலந்தில் ஆறுவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது.
இதனால் டேங்கரில் இருந்த சாக்கோலேட் பாகு இருபுறமும் உள்ள சாலையில் வழிந்தோடி உறைந்துவிட்டது.
இதனால் இருவழிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினர் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தியதுடன் சாலையில் உறைந்துகிடந்த சாக்கோலேட்டை வெந்நீர் ஊற்றிக் கரைத்து அகற்றினர்