மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று , அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் பேச்சுமூச்சற்றுப் போன பச்சிளம் குழந்தையை ஷெரீஃபின் உதவியாளர் தனது காரில் அதிவேகத்தில் காப்பாற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஷெரீஃபின் உதவியாளரான ஜெரெமி நிக்ஸ் ((Jeremie Nix)) பணி முடிந்து தனது அலுவலகக் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கார் திடீரென நிற்க மூர்ச்சையடைந்த பச்சிளம் குழந்தையுடன் பெண் ஒருவர் பதற்றத்துடன் ஓடிவந்தார். உடனடியாக தனது காரில் இருந்து இறங்கி ஓடிய ஜெரெமி குழந்தைக்கு முதலுதவி செய்ய முயற்சிப்பதும் அது பலனளிக்காத நிலையில் தனது காரில் அதிவேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுமான காட்சிகள் அவரது காரில் உள்ள காமிராவில் பதிவாகியுள்ளன.
சிகிச்சைக்குப் பின் குழந்தை குணம் அடைந்த நிலையில் சற்று தாமதித்திருந்தாலும் குழந்தை உயிரிழந்திருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.