இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தினால் நிலைமை மோசமாக அமையும் : அமெரிக்கா எச்சரிக்கை

This news gives information about The situation will be worse if another attack on India: America warns-india methu innoru thakuthal

பாகிஸ்தான் தரப்பில்  சில பயங்கரவாத குழுக்களை முடக்கியுள்ளது. சில பயங்கரவாதிகளின் சொத்துகளையும் முடக்கி உள்ளது.

அதேபோல ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீதும் சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து உள்ளது.

இந்தியா மீது  இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நிலைமை மோசமாக  மாறும் இது இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்ற சூழல் அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் மீது கண்டிப்பாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் தரப்பில்  சில பயங்கரவாத குழுக்களை முடக்கியுள்ளது.மேலும்  சில பயங்கரவாதிகளின் சொத்துகளையும் முடக்கி உள்ளது. அதேபோல ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீதும் சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து உள்ளது.

மேலும் அமெரிக்கா ஸ்திரத்தன்மையுடைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என  உறுதியாக உள்ளது எனவும் , இது சம்பந்தமாக அமெரிக்கா பல உலக நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.