அதிமுகவுக்கு பெரியஅடி! கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் தவெக-வில் இணைவு

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்

Hero Image

சென்னை : 2026 தமிழக அரசியல் களம் அடுத்தடுத்துப் பல அதிரடித் திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று ஒட்டுமொத்த கோடம்பாக்கமும், கோட்டையும் அதிர்ந்து போகும் வகையில் ஒரு மெகா அரசியல் இணைவு விழா நடந்து முடிந்துள்ளது.

அதாவது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பனையூர் தலைமையகத்தில், தவெக அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் முன்னிலையில், அதிமுக-வின் மிக முக்கிய தூண்களாகக் கருதப்பட்ட 3 முன்னாள் அமைச்சர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைத்துக் கொண்டனர்.

தவெக-வில் இணைந்தது யார், யார்?

கடம்பூர் ராஜூ (முன்னாள் அதிமுக அமைச்சர் - தென் மண்டலத்தின் முக்கிய முகம்) எம்.சி.சம்பத் (முன்னாள் அதிமுக அமைச்சர் - வட தமிழகத்தின் சீனியர் பலம்) உடுமலை ராதாகிருஷ்ணன் (முன்னாள் அதிமுக அமைச்சர் - கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத விக்கெட்) எம்.எஸ்.எம். ஆனந்தன் (முன்னாள் அதிமுக அமைச்சர்)

இவர்களுடன் பல முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (Ex-MLAs) மற்றும் அமமுக-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் தவெக-வில் ஐக்கியமாகியுள்ளனர். மேலும், திமுக நிர்வாகிகளும் இந்த விழாவிற்காகப் பனையூர் தலைமையகத்திற்கு வருகை தந்தது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

ஸ்கெட்ச் ?

தவெக-வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மற்றும் என்.ஆனந்த் ஆகியோர்தான் கடந்த சில மாதங்களாக அதிமுக, திமுக மற்றும் அமமுக-வில் அதிருப்தியில் இருந்த சீனியர் தலைவர்களைத் தொடர்ந்து ஃபாலோ செய்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் களத்தில் பூத் கமிட்டி அமைப்பது முதல் வாக்கு வங்கியைத் திருப்புவது வரை எக்ஸ்பீரியன்ஸ் உள்ள 'கிரவுண்ட் லெவல்' தலைவர்கள் தவெக-வுக்கு தேவைப்பட்ட நிலையில். அந்தத் தேவையை இந்த 3 அமைச்சர்களின் வரவு பூர்த்தி செய்துள்ளது.

அதிமுக-வுக்கு விழுந்த பலத்த அடி!

உடுமலை ராதாகிருஷ்ணன் கொங்கு மண்டலத்திலும், கடம்பூர் ராஜூ தென் மாவட்டங்களிலும் பல ஆண்டுகாலமாக அதிமுக-வின் வாக்கு வங்கியைத் தங்கள் கைகளில் வைத்திருந்தவர்கள். இவர்களின் வெளியேற்றம், வரும் தேர்தலில் அதிமுக-வின் வாக்கு சதவீதத்தில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதிமுக, திமுக, அமமுக என முக்கோணப் புள்ளிகளில் இருந்து சீனியர்கள் தவெக-வை நோக்கி நகர்வது, தமிழ்நாட்டின் பாரம்பரிய இருமுனை அரசியலை (DMK vs ADMK) உடைப்பதற்கான முதல் அஸ்திவாரம் என்பதாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுகவுக்கு பெரியஅடி! கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் தவெக-வில் இணைவு