தீபாவளியை நெய் மைசூர்பாக்குடன் ஜமாய்த்திடுங்க....!!!

தீபாவளியை நெய் மைசூர்பாக்குடன் ஜமாய்த்திடுங்க....!!!

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 1 கப்

சர்க்கரை – 1 1/2 கப்

நெய் – 1கப்

எண்ணெய் – 1 கப்

செய்முறை :

அடுப்பில் பாத்திரத்தை வைத்து நன்கு சூடானது, அதில் கடலை மாவை போட்டு வறுத்து எடுத்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் சர்க்கரை பாகு காய்ச்சுவதற்கு பாத்திரத்தில் 1 1/2 கப் சர்க்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கம்பி பதம் வருமளவுக்கு காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும்.  அடுத்ததாக எண்ணெய் மாறும் நெய்யை ஒன்றாக ஊற்றி காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் அந்த சர்க்கரை பாக்கிற்குள் கடலைமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மாவு கட்டிபடாதவாறு கிளற வேண்டும். பின் நெய் மற்றும் எண்ணெய்யை சூடாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அதனுள் உள்ள எண்ணெய் வெளியாகும்போது அதை இறக்கி நெய் தடவிய தட்டில் வைத்து 30 நிமிடம் கழித்து வெட்டி பரிமாற வேண்டும்.