நெற் களஞ்சியத்தை பாதுகாக்க அரசுக்கு வலியுறுத்தல்..!

ஸ்ரீ பாலைவனநாத சுவாமி சிவன் கோயில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருப்பாலத் துறையில் உள்ளது.

ஸ்ரீ பாலைவனநாத சுவாமி சிவன் கோயில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருப்பாலத் துறையில் உள்ளது.

இந்தக் கோயிலில் ரகுநாத நாயக்கரால்  கி.பி 1634 ல் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் உள்ளது.

இந்த நெற் களஞ்சியம் 36 அடி உயரம் கொண்டது. அடிப் பகுதி வட்ட வடிவமாகவும் மேல் பகுதி கூம்பு வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற் பகுதி, நடுப் பகுதி, கீழ் பகுதி என 3 வாயில்களை கொண்டது. இதில் 3000 கலம் தானியம் சேமிக்கலாம்.

இந்த நெற்களஞ்சியம் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நெற் களஞ்சியத்தின் மேற் பகுதியில் மரக்கன்று வளர்ந்து வருகிறது. இந்த மரக் கன்று மேலும் வளர்ந்தால் நெற்களஞ்சியம் மேலும் சிதிலமடையும் நிலை ஏற்படும்.

இதனால் இந்த நெற் களஞ்சியத்தின் பாரம்பரியம் களையும் என்றும் அந்த மரக் கன்றை வெட்டி அப்புறப் படுத்த வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேப் போன்று இந்த ஆலயத்தின் கோபுரம், மண்டபங்களில் வளர்ந்திருக்கும் செடிகளையும் அப்புறப் படுத்தி கோயிலை பராமரிக்க  வேண்டும் என்றுபக்தர்கள்  வலியுறுத்தி வருகிறார்கள்.