சீனாவிற்கு ,அதிபர் டொனால்டு டிரம்ப் உதவி..!

அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ZTE-க்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு, அமெரிக்காவின் வர்த்தக

அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ZTE-க்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு, அமெரிக்காவின் வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தை, கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவிலிருந்து, அந்நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், உபகரணங்களை, 7 ஆண்டுகளை இறக்குமதி செய்ய, அமெரிக்க வர்த்தக தொழில்துறை கடந்த மாதம் தடை விதித்தது.

இதனால், சீன தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தி நிறுவனமான ZTE-ன், 70 ஆயிரம் தொழிலாளர்களை வேலையிழக்கும் ஆபத்து உருவானது. இதுதொடர்பாக, சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டதை அடுத்து, தடையை விலக்க அதிபர் உத்தரவிட்டார்.