நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை..!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டனத் தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு இன்று

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டனத் தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட 7 கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கண்டன தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கண்டனத் தீர்மான நோட்டீஸ் அனுமதிப்பதற்கு உகந்தது அல்ல எனக் கூறி, வெங்கய்யா நாயுடு நிராகரித்து விட்டார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அரவிந்த் பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு சட்ட அமர்வில் இன்று விசாரனணைக்கு வருகிறது

நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை..!