காங்கோ நாட்டில் உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாக்க ஐநாவின் யுனிசெப் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்டுப் போரால் அங்குள்ள கசாய் (kasai) மாநிலம் கடும் சேதத்தை சந்தித்தது. சுமார் 15 லட்சம் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டன.
அப்பகுதியில் அமைதி திரும்பினாலும், துப்பாக்கி குண்டுகளுக்கு பதில், மக்களை பசி வாட்டி வதைக்கிறது. போரில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டதால் போதிய உணவின்றி, ஏழரை லட்சம் குழந்தைகள் தவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்கும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
மறு கட்டமைப்பு, ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை வழங்க 88 மில்லியன் டாலர் தேவைப்படும் என்று யுனிசெப் கூறியிருந்த நிலையில், அவற்றில் வெறும் 25 சதவீதம் நிதி மட்டுமே கிடைத்துள்ளது.