அவுட்டான கடுப்பில் பேட்டை எட்டி உதைத்த பென் ஸ்டோக்ஸ்! வைரலாகும் வீடியோ !

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது.முதலில் இறங்கிய

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது.முதலில் இறங்கிய  ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

unknown node

இப்போட்டியில் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மிகவும் மோசமான ரன்களில் வெளியேற மத்தியில் களமிறங்கிய நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மிக சிறப்பாக விளையாடி 115 பந்தில் 89 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இப்போட்டியில் 37-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.அந்த ஓவரில் கடைசி பந்தை யாக்கராக  வீச அந்த பந்தை தடுக்க முடியாமல் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆனார்.அவுட் ஆன கடுப்பில் பென் ஸ்டோக்ஸ் பேட்டை அப்படியா கீழே போட்டுவிட்டு தனது இடது காலால் எட்டி உதைத்தார்.பென் ஸ்டோக்ஸ் பேட்டை உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

unknown node