வீரேந்திர ஷேவாக் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அணியின் ஆலோசகர் பதவியிலிருந்துவிலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பஞ்சாப் அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணி அடித்த 158 என்ற இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் அணி 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டி முடிந்ததும் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா, அணியின் ஆலோசகர் சேவாக்குடன் வாக்குவாதம் செய்தார்.
பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கியது குறித்து பிரீத்தி ஜிந்தா அதிருப்தி தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சேவாக் அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.