விரைவில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்போம் : தஞ்சாவூர் டிஐஜி லோகநாதன்

மன்னார்குடியில், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம் என தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்திருக்கிறார்.

மன்னார்குடியில், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம் என தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்திருக்கிறார்.

மன்னார்குடி அசேஷம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், கடந்த 7ஆம் தேதி துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

இதுதொடர்பாக, மன்னார்குடி காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனையில், தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன், திருவாரூர் எஸ்.பி மயில்வாகனன் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் புறப்பட்ட டிஐஜி லோகநாதன், வங்கி கொள்ளையர்கள் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்போம் : தஞ்சாவூர் டிஐஜி லோகநாதன்