தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா கர்நாடக பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்கத்திலும் கோவை, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகள் அதிகமாக இருந்தது. தற்போது வந்த வானிலை அறிவிப்பின் படி, வடமாநிலங்களில் நாளை முதல் மழையின் அளவானது குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘ இதன் காரணமாக அரபி கடலுக்குள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சில்லூர் அணை , திருவாணி அணை மற்றும் வால்பாறை அணை ஆகியவைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை தீவிரமாகி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். தொடர்ந்து நாளையும் மழை […]
தமிழகத்தில் திருவண்ணாமலை காஞ்சிபுரம் விழுப்புரம் சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்ப சலனத்தின் காரணமாக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. அதே போல தென்மேற்கு பருவக்காற்று வீசுவதின் காரணமாக நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு.
மும்பையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது அதி தீவிர மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் இடைவிடாது பெய்த கனமழையால் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரத்னகிரி மாவட்டத்தில் அணை ஒன்று உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகளில் முழுவதும் நேர் தேங்கி இருப்பதால் பொது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இனி வரும் 2 நாட்கள் […]
தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.இந்த வெயிலின் தாக்கத்தால் ஏரி ,ஆறு ,குளம் ,அணைகள் என் அனைத்தும் வற்றி வறண்டு காட்சி அளித்தது.இவைகள் அனைத்தும் வற்றியதால் மக்கள் தண்ணீர்க்கு கடும் அவஸ்தை பட்டனர்.தண்ணீர் பற்றாக்குறை தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் தலைநகரத்தில் உச்சம் என்று நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்து வருகிறது.காரணம் ஒரு இரு தினங்களாக பெய்து வரும் மழையால் […]
தமிழகத்தில் கடுமையான வெயில் தாக்கத்தினால் நிலவிய தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைத்து வந்தது.அணைகள் அனைத்தும் வற்றி வறண்டு விட்டது.குடிப்பதற்கு , குளிப்பதற்கு என்று தலைநகரம் தவித்து வந்த நிலையில் இன்று சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளான தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் பல்லாவரம், வடபழனி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம்,மீனம்பாக்கம், வேளச்சேரி, ஆகிய இடங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை […]
சென்னையில் விமான நிலையம் இருக்கும் மீனம்பாக்கம் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க இருக்கும் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் திருச்சி,கொல்கத்தா, திருவனந்தபுரம், நாக்பூர், டில்லி ஆகிய இடங்களில் இருந்து வரும் விமானங்கள் தரை இறங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதே போல் சென்னையில் இருந்து கொச்சி, விசாகப்பட்டினம், டெல்லி,ராஜமுந்திரி, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் அரை மணி நேரம் […]
சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று மிதமான மழை பெய்தது. தாம்பரம், மீனம்பாக்கம், போரூர் உட்பட சென்னை நகரின் சுற்று வட்டாரப் பகுதியில் இன்று மாலை மழை பெய்தது. இன்று பெய்த மழையின் காரணமாக கடும் வெயில் மற்றும் குடிநீர் திண்டாட்டத்தில் இருந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், 190 […]
தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னை அதுவும் சிங்கார சென்னை இன்று நீருக்கு சிரமப்படுவதை #தவிக்கும் _தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் முலம் உலகமே உற்று நோக்கும் அவலம் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த மூன்று மாதத்திற்கு மழை கிடையாது அதுவும் சென்னைக்கு கொஞ்சம் கஷ்டம் தான் என்று கூறியது வானிலை மையம். இந்நிலையில் மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு […]
கேரளாவில் தென்மேற்கு பருவ மழையானது நாளை முதல் தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தென்கிழக்கு அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வருடம் தோறும் தென்மேற்கு பருவமழையால் கேரளா மட்டுமல்லாது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களும் பயனடையும்.இனிநிலையில் இந்த ஆண்டு பருவ மழையானது ஜூன் 2 ம் தேதியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் வேகம் இல்லாததால் தொடர்ந்து தாமதமாகி வந்தது.இப்போது காற்றின் வேகம் […]
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஆண்டிப்பட்டியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.மழையின் வரவால் வெப்பம் தணிந்து உள்ளதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய தலைவராக விஞ்ஞானி மிருத்யுதின் ஜெய் மொகபத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி யாக இருந்து வந்த மிருத்யுதின் ஜெய் மொகபத்ரா தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஆகஸ்ட் 1 தேதி தனது பதவியை ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை ,வேலூர் மற்றும் அபினாசி சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அவினாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது.மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது மதுரை மாவட்டம் மேலூர் ,கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கத்தரி வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்தாவது,வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை […]
வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஜூன் 5 ம் தேதி வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட மாநிலங்களான உத்திர பிரதேசம்,பஞ்சாப்,ராஜஸ்தான்,சட்டத்தீஷ்கர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக வெப்பம் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. இந்நிலையில்,ஜூன் 2 ம் தேதிக்கு பின் அனல் வெப்பக்காற்று அதிகமாகி புழுதிப்புயல் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் ரெட் அலார்ட் […]
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என கூறியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் இருந்து கேரளாவில் பெய்ய ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஐந்து நாட்கள் தாமதமாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட தேதியில் மழை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த […]
வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஃபானி புயலாக வலுப்பெற்று ஒடிசாவை சூறையாடி சென்றது. அவ்வாறு கரையை கடக்கும் போது தமிழகத்திற்கு மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துப்போய், புயல் கரையை கடக்கும் போது, இங்குள்ள ஈரப்பத காற்றையும் ஈர்த்துவிட்டு சென்றதால் இங்கு மழைக்கு வாய்ப்பில்ல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அனல்காற்று வீசி, வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என கூறப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் […]