மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார். புதுச்சேரிக்கு ரூ.8,452 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.அவரது உரையில்,விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் .
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.2,500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025