நான்கு முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து ஒரு ஆன்லைன் படத்தை இயக்க உள்ளனர்!

தற்போது டெக்னாலஜி வளர்ந்து வரும் சூழலில் திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனால் தற்போது பெரும்பாலான புதிய இயக்குனர்கள் ஆன்லைன் வெப்சீரிஸ், ஆன்லைன் படங்கள் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதேபோல் பாலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருந்தனர்.
அதேபோல, தற்போது நான்கு முன்னணி தமிழ் இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தை எடுத்து அதனை நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட உள்ளனர். இயக்குனர் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் சேர்ந்து ஒரு படத்தை இயக்க உள்ளனர். அந்த படம் இணையதள பக்கமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025