கோவையில் இருந்து சென்ற கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் நேருக்கு நேர் மோதல்..! 30 பயணிகள் காயம் ..!

கோவையில் இருந்து டெல்லி நிஸாமுதீன் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.
கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தின் உள்ளே நின்றதால் ரயில் குறைந்த வேகத்தில் இயங்கியுள்ளன. இதனால், பெரிய அளவில் நடக்க இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் 30 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் , சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என முதற்கட்ட தகவலில் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025