வீடியோ :பறந்து வந்து விழுந்த கார்.! பெண் பலி..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தலைநகர் ஹைதராபாத்தில் கட்ச் பவுளி பகுதியில் மேம்பாலத்தின் ஒரு விபத்து நடந்துள்ளது. நேற்று மதியம் ஒரு மணி அளவில் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த ஒரு சிவப்பு கார் வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
CCTV footage from the flyover. https://t.co/N7gRmMsuIt pic.twitter.com/pxun51kqrc
— Bala (@naartthigan) November 23, 2019
இந்த கார் அதிவேகமாக வந்ததால் சுவரை இடித்துக்கொண்டு மேலிருந்து கீழே பறந்து வந்தது மரத்தின் மீது விழுந்தது. அப்போது மரத்தின் கீழே ஆட்டோவிற்காக காத்திருந்த பெண் மீது கார் விழுந்ததில் பெண் சம்பவ இடத்திலே இறந்து உள்ளார்.மேலும் மரம் முறிந்து மரத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.
விபத்துக்குள்ளான ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான மேம்பாலம் மூன்று நாள்கள் மூடப்படும் என ஹைதராபாத் மாநகராட்சி அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025