அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி – மு.க.ஸ்டாலின்

அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சியில் ‘நேரடித் தேர்தலா – மறைமுகத் தேர்தலா?’ என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல! pic.twitter.com/2wxpO5FPR9
— M.K.Stalin (@mkstalin) November 23, 2019
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சியில் ‘நேரடித் தேர்தலா – மறைமுகத் தேர்தலா?’ என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல
அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி.அரசு விழாக்களை சிறிதும் நாணமின்றிப் முதல்வர் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் போனது பற்றி முதல்வர் ஏன் பேசவில்லை? என்றும் அதிமுகவினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நடத்தியது திமுக அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுகத் தேர்தல் நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025