தளபதி விஜய்க்கு கூறிய கதையை தான் சூப்பர் ஸ்டாரிடமும் கூறியுள்ளாரா GVM? தலைவர்-170?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் 168 வது திரைப்படம் உருவாக உள்ளது. இப்பட ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ரஜினியிடம் ஒரு கதை கூறியுள்ளாராம். அந்த கதை ரஜினிக்கு பிடித்து விட்டது என தகவல் வெளியானது. அந்த திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த கதை விஜய்க்கு கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய யோகன் அதியாயம் ஒன்று திரைப்படத்தின் கதை தான் என கூறப்படுகிறது. அந்த கதையைதான் ரஜினியின் 170 திரைப்படமாக எடுக்க உள்ளார் என தகவல் கசிந்து உள்ளது. ரஜினி 169 திரைப்படத்தை யார் எடுக்க உள்ளார் என எந்த தகவலும் வெளியாகவில்லை.