‘அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்!’ – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

Default Image
  • அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பி.எச்.பாண்டியன் நேற்று சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
  • அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், சட்ட ஆலோசகர் எனவும் பல பதவிகளில் முக்கிய பங்காற்றியவர் பி.எச்.பாண்டியன். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வருத்தத்தை இரங்கல் தெரிவித்தனர்.

இவரது இறப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது இரங்கலை நேரில் சென்று தெரிவித்தார். சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பி.எச்.பாண்டியனுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு பின்னர் செய்தியாளர்கள் சந்திக்கையில் பி.எச்.பாண்டியன் சிறந்த வழக்கறிஞராக பணியாற்றினார். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே அரசியலில் அதிமுகவிற்கு பங்காற்றி வருகிறார். கழக சட்ட ஆலோசகராக இருந்துள்ளார். எம்எல்ஏவாகவும், அதிமுக எம்பி குழு தலைவராகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அரசியலில் தனி முத்திரை பதித்தவர். இவரது இழப்பிற்காக அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.’ என தனது இரங்கலை தெரிவித்து விட்டு சென்றார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்