முரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன்- ரஜினிக்கு பதிலடி

- முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள்,துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
- நடிகர் ரஜினிக்கு திமுகவின் நாளிதழான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் நீண்ட நாட்களாக கூறி வருகிறார்.ஆனால் அரசியலுக்கு வந்தபாடில்லை.மாறாக ரஜினி கூறும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.அந்த வகையில் தான் துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.அப்பொழுது அவர் பேசுகையில்,முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று கூறினார்.ரஜினி இவ்வாறு கூறியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் விளைவாக நடிகர் ரஜினிக்கு திமுகவின் நாளிதழான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது.இன்று வெளியாகியுள்ள முரசொலி நாளிதழில், முரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன், திராவிட இயக்கத் தமிழன், மனிதன் என பொருள் முரசொலி வைத்திருந்தால் சாதி, மத பேதம் பார்க்காதவன், ஆண்டான்-அடிமைக்கு எதிரானவன் என பொருள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025