மேலும் 12 பேருக்கு கொரோனா.! கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 298 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 63 மற்றும் கேரளாவில் 40 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த 12 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கண்ணூர் 3, காசராகோடு 6, எர்ணாகுளம் 3 என மொத்தம் 12 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசாங்கம் சொல்லவதை மக்கள் பின்பற்றாமல் கூட்டமாக கூடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது என்று இருந்தால் 144 தடை அறிவிக்க கூட தயங்கமாட்டோம் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025