கொரோனா பாதிப்பு 16,000-ஐ தாண்டியது.! பலி 507 லிருந்து 519 ஆக உயர்வு.!

உலகளவில் 23,59,332 பேர் பாதிக்கப்பட்டு, 6,06,675 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,712 லிருந்து 16,116 ஆக அதிகரித்துள்ளது.
உலக முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் வல்லரசு நாடுகள் திணறி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் வைரஸ் பரவலை சமாளிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி உலகளவில் 23,59,332 பேர் பாதிக்கப்பட்டு, 6,06,675 பேர் குணமடைந்துள்ளனர். 1,61,949 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அதே சமயத்தில் இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், தினந்தோறும் உயர்ந்த வண்ணமே உள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,712 லிருந்து 16,116 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 507 லிருந்து 519 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025