#BREAKING: நிவர் புயலின் தற்போதைய நிலவரம்..!

அதி தீவிர புயலாக நிவர் புதுச்சேரிக்கு அருகே கடந்து வருகிறது. இதனால், இடியுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்து செல்வதால் சாலையில் மரங்கள் விழுந்துள்ளது. நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் மையப்பகுதியை கரையை கடந்து வருவதால் பலத்த மழைபெய்து வருகிறது. புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென்மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.