“கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் விளையாட வர வேண்டாம்”- ஆஸ்திரேலியா அமைச்சர்!

“கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது என்றால், இந்திய வீரர்கள் யாரும் விளையாட வர வேண்டாம்” என குயிண்ட்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இதனால் சிட்னி சென்றடைந்த இந்திய அணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பிரித்வி ஷா, நவதீப் சைனி, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய வீரர்கள், கொரோனா விதிகளை மீறி உணவகத்திற்கு சென்றது, சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில், விதிகளை மீறிய அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள குயிண்ட்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ், “கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது என்றால், இந்திய வீரர்கள் யாரும் விளையாட வர வேண்டாம்” என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்தால் பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Today I was asked about reports the Indian Cricket Team wants quarantine restrictions eased just for them, ahead of the upcoming Gabba Test. My response ???? #Cricket #IndiavsAustralia @ICC @CricketAus pic.twitter.com/MV7W0rIntM
— Ros Bates MP (@Ros_Bates_MP) January 3, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025