நஸ்ரியாவை பார்த்து தான் நடிக்க வந்தேன் – கல்யாணி பிரியதர்ஷன்..!!

Default Image

நஸ்ரியாவை பார்த்து தான் தான் நடிக்க வந்ததாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன்  சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஹிரோ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்நது அடுத்ததாக புத்தம் புதுக் காலை படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் கூறியது “விடுமுறை காலத்தில் நான் அப்பாவை பார்ப்பதற்காக சூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்வேன் அப்போது அங்கு அப்பாவோட நண்பர்கள் எல்லாரும் இருப்பாங்க அதைப் பார்த்துவிட்டு நானும் சினிமாவிற்குள் வரணும் என்று முடிவெடுத்தேன்.

நான் நடிப்பில் இறங்கியதற்கு  முக்கிய காரணமே நஸ்ரியாதான் ஏனெனில் நஸ்ரியாவின் இயல்பான நடிப்பை பார்த்து தான் எனக்கு நடிக்க வரணும்னு ஆசை வந்தது . ஒரு தடவை நஸ்ரியாவை நேரில் பார்த்து பேசணும் என்று ஆசை. அவருடைய கணவர் நடிகர் பஹத் பாசில் என்னுடைய பேவரைட் நடிகர் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT