மோகன்லால் இயக்கத்தில் மலையாள படத்தில் களமிறங்கும் தல அஜித்..!!

நடிகர் மோகன் லால் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான 10 நாள் படப்பிடிப்பு மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன் அஜித் கூட்டணி அமைக்கப்போகிறார் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் ஹெச் வினோத் இயக்குவதாக தகவல்கள் பரவி வந்தது.
ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகர் அஜித் அடுத்ததாக நடிகர் மோகன் லால் இயக்கும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு நிதி காக்கும் பூதம் என்று பெயர் வைத்துள்ளதாகவும் முழுக்க முழுக்க 3 டியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்ததிரைப்படத்திற்கு லிடியன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறாராம்.பிரபல மலையாள சினிமா நடிகர் ப்ருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025