#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் காலமானார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் வயது (91) இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிக்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், செ.அரங்கநாயகம் சற்று நேரத்திற்கு முன் காலமானார். தொண்டாமுத்தூர், கோவை மேற்கு தொகுதியில் இருந்து தலா இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்வானார். அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
1988-ல் ஜெ. அணி – ஜா.அணி என அ.தி.மு.க பிளவுபட்டிருந்த போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் துணை நின்றவர் அரங்கநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.